மிச்சிகன் ஏரியின் அடிப்பகுதியில் 40 பெரிய பள்ளங்கள் (கிரேட்டர்கள்) கண்டுபிடிக்கப்பட்ட செய்தி உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக நம்பப்படும் இந்த பள்ளங்கள், அந்தப் பகுதியின் புவியியல் வரலாறு பற்றிய புதிய கேள்விகளை எழுப்பியுள்ளன.
வழக்கமான கணக்கெடுப்பின் போது, சோனார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய போது, இந்த பள்ளங்கள் கண்டறியப்பட்டன. சில பள்ளங்கள் 500 அடி அளவுக்கு பெரியவை என்று கூறப்படுகிறது. இவை, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பனிப்பாறை நகர்வுகள் அல்லது வேறு ஏதேனும் புவியியல் நிகழ்வுகள் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பள்ளங்களின் தோற்றம் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் அறிய, விஞ்ஞானிகள் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.