உலகின் எட்டாவது கண்டத்தை புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இந்த கண்டத்திற்கு ஜீலந்தியா என பெயரிட்டுள்ளனர். கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்ட பாறை மாதிரிகளை பயன்படுத்தி இந்த புதிய கண்டத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டம் 375 ஆண்டுகள் மறைந்து இருந்ததாகவும் கூறியுள்ளனர். இது நியூசிலாந்துக்கு அருகே உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பசுபிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் சுமார் 3500 அடி ஆழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த புதிய கண்டத்தின் 94 சதவீத பகுதி நீருக்கு அடியில் மூழ்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக 49 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக இந்த கண்டம் அமைந்துள்ளது. இதில் பல தீவுகள் உள்ளன. விரைவில் இதற்கு அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.














