அலாஸ்காவில் மிகப்பெரிய கடலடி எரிமலை கண்டுபிடிப்பு

November 19, 2024

அலாஸ்கா கடற்கரையிலிருந்து 1600 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய கடலடி எரிமலை இருப்பதை அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஹீலி கப்பலில் இருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய எரிமலையிலிருந்து வாயு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு ஆழத்தில் இருப்பதால் இது தற்போது எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, அலாஸ்கா கடலின் அடிப்பகுதியில் இன்னும் பல அறியப்படாத விஷயங்கள் இருக்கலாம் என்பதை நிரூபிக்கிறது. அலாஸ்கா ஆர்க்டிக் கடற்கரை துறைமுக அணுகல் பாதை ஆய்வின் போது, […]

அலாஸ்கா கடற்கரையிலிருந்து 1600 மீட்டர் ஆழத்தில் மிகப்பெரிய கடலடி எரிமலை இருப்பதை அமெரிக்க கடலோரக் காவல்படையின் ஹீலி கப்பலில் இருந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய எரிமலையிலிருந்து வாயு வெளியேறுவது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இவ்வளவு ஆழத்தில் இருப்பதால் இது தற்போது எந்தவித அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு, அலாஸ்கா கடலின் அடிப்பகுதியில் இன்னும் பல அறியப்படாத விஷயங்கள் இருக்கலாம் என்பதை நிரூபிக்கிறது.

அலாஸ்கா ஆர்க்டிக் கடற்கரை துறைமுக அணுகல் பாதை ஆய்வின் போது, கப்பல் போக்குவரத்திற்கு பாதுகாப்பான வழிகளை கண்டறிய ஹீலி கப்பல் பயன்படுத்தப்பட்டது. இது பனிக்கட்டிப் பகுதிகளில் ஆராய்ச்சி செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சிறப்பு கப்பலாகும். இதன் மூலம் கடலடி எரிமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu