இந்தியாவின் அதிக எடையுள்ள ராக்கெட்டின் எடை திறனை மேலும் உயர்த்தி இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரோ செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரோ உருவாக்கியுள்ள 'எல்.வி.எம்., - 3' என்ற அதிக எடையுள்ள ராக்கெட் அடுத்த ஆண்டில் செலுத்தப்பட உள்ளது. இந்த ராக்கெட் அதிக எடையுள்ள செயற்கைக்கோள்களை ஏந்திச் செல்ல உள்ளது. அதற்கேற்ப இந்த ராக்கெட்டுக்காக 'சி.இ. - 20' என்ற கிரையோஜெனிக் இன்ஜின் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிக எடையுள்ள ராக்கெட்டை செலுத்தக் கூடிய வகையில் இந்த இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில், ராக்கெட்டின் எடைத் திறன் 450 கிலோவாக உயர்ந்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.