ஸ்காட்லாந்தின் முதல் இஸ்லாமிய முதல்வரான ஹம்சா யூசுப் தனது பதவியிலிருந்து விலகி உள்ளார்.
இங்கிலாந்தின் ஒரு அங்கமாக ஸ்காட்லாந்து உள்ளது. கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் முதல் இஸ்லாமிய முதல்வராக ஹம்சா யூசுப் பதவியேற்றார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவர், ஸ்காட்டிஷ் கிரீன் கட்சியுடன் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக கடந்த வாரத்தில் கூட்டணி முறிந்தது. எனவே, ஹம்சா யூசுப் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகளில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, ஸ்காட்லாந்தில் அரசியல் குழப்பம் உச்சத்தை எட்டி உள்ளது. இந்த சூழ்நிலையில், ஹம்சா யூசுப் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.