முற்போக்கு சிந்தனைகளை வழங்கி வரும் இணையதள ஊடகமான நியூஸ் கிளிக் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பிபிகே நியூஸ் கிளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான நியூஸ் கிளிக் இணையதள ஊடகம் பிரதீப் புர்கயாஸ்தா என்பவரால் உருவாக்கப்பட்டது. இது 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு பல்வேறு இயக்கங்கள் மற்றும் போராட்டங்களை குறித்து செய்திகளுக்கும் அரசின் தவறான கொள்கைகளுக்கு விரிவான செய்திகளை தருவதிலும் இந்த ஊடகம் பெயர் பெற்றது. இந்த நிலையில் இந்த ஊடகத்தின் அலுவலகத்திலும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் இல்லத்திலும் காவல்துறை சோதனை நடத்தியது. இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் சீனாவிடம் இருந்து மறைமுகமாக பணம் பெற்றதாக சட்ட விரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இந்த சோதனை 30 இடங்களில் நடத்தப்பட்டது. இதனை அடுத்து இந்த அலுவலகத்திற்கு காவல் துறையினர் சீல் வைத்தனர். இதற்கு எதிர்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் கடுமையாக விமர்சித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.