செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா (SEBI) ன் உத்தரவு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், கட்டுப்பாட்டாளரின் நடவடிக்கைக்கு எதிராக சட்டப்பூர்வ வழிகளைப் பற்றி யோசித்து வருவகிறது என்றும் பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது.
பிரிக்வொர்க் என்பது இந்தியாவில் SEBI-யில் பதிவு செய்யப்பட்ட கடன் மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். பிரிக்வொர்க் ஆனது, கார்ப்பரேட் துறை, நிதித் துறை, உள்கட்டமைப்புத் துறை, காப்பீட்டுத் துறை, பொதுத்துறை நிறுவனங்கள், மாநில அரசு, நகராட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு மூலதனச் சந்தை கருவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் போன்ற பல்வேறு சேவைகள் மற்றும் தயாரிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில், செபி கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளுக்கு வெளிப்படையான கடன் மேம்பாட்டு அம்சங்களைக் கொண்ட பத்திரங்களின் புதிய கட்டமைப்பை வெளியிட்டது. இந்த புதிய கட்டமைப்பு ஜனவரி 1, 2023 முதல் நடைமுறைக்கு வரும் என செபி ௯றியது.
இந்நிலையில் மார்க்கெட் ரெகுலேட்டர், ப்ரிக்வொர்க் ரேட்டிங்ஸ் நிறுவனத்திற்கு, குறிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் அதன் செயல்பாடுகளை முடிக்குமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் பிரிக்வொர்க் ரேட்டிங்ஸ் நிறுவனமானது அதனை பின்பற்றத் தவறிவிட்டதாக செபி ௯றுகிறது. இது பற்றி செபியானது, இந்திய ரிசர்வ் வங்கியுடன் ஆய்வுகளை நடத்திய பிறகு, பிரிக்வொர்க்கின் உரிமத்தை ரத்து செய்தது. மேலும் புதிய வாடிக்கையாளர்களை எடுப்பதற்கும் Brickworkகிற்கு தடை விதித்தது.
இதற்கு பதிலளித்த Brickwork , செபியின் உத்தரவு நிறுவனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ௯றியது. மேலும் நிறுவனமானது அனைத்து வேலைகளும் திருப்திகரமாக நடைபெறுவதை உறுதிசெய்ய, Brickwork அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது என்று ௯றியது. மேலும் இந்த விவகாரத்தில் தகுந்த சட்டப்பூர்வ ஆதரவையும் நிறுவனம் பரிசீலித்து வருகிறது என்றும் தெரிவித்தது.














