கோவை மாவட்டம் அவினாசி சாலை பீளமேடு பகுதியில், ஜீ ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மேலும், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு, பீளமேடு பகுதியில் இரண்டு மண்டல அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இரண்டு அலுவலகங்களிலும் தொடர்ந்து இரு நாட்களாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சுமார் 8 அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனையின் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.