இரண்டாம் சுற்று மருத்துவ கலந்தாய்வு முடிவில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 800க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில ஒதுக்கீட்டில் இருந்து 15 சதவீத இடங்கள் அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டிற்கு வழங்கப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் இடங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் தற்போது உள்ள நடைமுறையின் படி விருப்பப்பட்டால் தேர்தெடுத்த இடங்களை தவிர்க்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாநில அரசு வழங்கும் இடங்கள் நிரம்பாமல் உள்ள போது, அவை திரும்ப சம்பந்தபட்ட மாநிலங்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது. அந்த நடைமுறை நிறுத்தப்பட்டதே அதிக அளவு காலியிடங்கள் ஏற்பட காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நடப்பாண்டில் 2வது சுற்று கலந்தாய்வின் முடிவில் அகில இந்திய அளவில் 5 ஆயிரத்து 931 இடங்களும், தமிழகத்தில் 892 இடங்களும் உள்ளன. சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட முன்னணி மருத்துவக் கல்லூரிகளிலும் காலி இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.