சீனா: பொருளாதாரத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு பதிவு

March 7, 2023

கடந்த 2022 ஆம் ஆண்டு, சீனாவின் பொருளாதாரத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிகழாண்டிற்கான சீனாவின் ஜிடிபி இலக்கு கடந்த ஆண்டுகளை விட குறைவாக (5%) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இலக்குகள் 6 5.5, 5% ஆக தொடர் சரிவை பதிவு செய்து வருகிறது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாகவே (கிட்டத்தட்ட 3% மட்டுமே) […]

கடந்த 2022 ஆம் ஆண்டு, சீனாவின் பொருளாதாரத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவு பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நிகழாண்டிற்கான சீனாவின் ஜிடிபி இலக்கு கடந்த ஆண்டுகளை விட குறைவாக (5%) அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 முதல் 2023 ஆம் ஆண்டு வரையிலான சீனாவின் ஜிடிபி வளர்ச்சி இலக்குகள் 6 5.5, 5% ஆக தொடர் சரிவை பதிவு செய்து வருகிறது. மேலும், கடந்த 2022 ஆம் ஆண்டில், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாகவே (கிட்டத்தட்ட 3% மட்டுமே) சீனாவின் ஜிடிபி பதிவானது. இது 1970 ஆம் ஆண்டிற்கு பின்னர் பதிவாகும் குறைந்த வளர்ச்சியாகும்.

சீனாவின் பல நகரங்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு, பெரும்பாலான நிறுவனங்கள் பின்னடைவை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள நிறுவனங்களில் பணி அமர்வுகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அத்துடன், சீனாவில் ரியல் எஸ்டேட் வணிகம் பெருமளவு பாதிப்படைந்துள்ளதால், அந்நாட்டின் 3ம், 4ம் தட்டு நகரங்களின் வளர்ச்சி பாதிப்படைந்துள்ளது.

சீனாவின் ஜிடிபி வளர்ச்சி குறைந்து வரும் அதே வேளையில், அந்நாட்டின் ராணுவ பட்ஜெட் தொடர் உயர்வுகளை பதிவு செய்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல், 6.6, 6.8, 7.1% என்ற ரீதியில் ராணுவ பட்ஜெட் அதிகரித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் வேளையில், சீனா, ராணுவ செலவினங்களை தொடர்ந்து அதிகரிப்பது உலக அரங்கில் பேசு பொருளாகி உள்ளது.

2
2
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu