மணிப்பூரில் பயங்கரவாதிகள் மீது பாதுகாப்பு படையினரின் தாக்குதல்

November 12, 2024

மணிப்பூரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலால் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில், கடந்த ஆண்டு மே மாதம் முதல், மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே தொடர்ந்துவரும் மோதல்களால் பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இந்த நிலையில், ஜிரிபம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் தேடுதல் […]

மணிப்பூரில் பயங்கரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலால் 11 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில், கடந்த ஆண்டு மே மாதம் முதல், மெய்தி மற்றும் குகி சமூகத்தினர் இடையே தொடர்ந்துவரும் மோதல்களால் பரபரப்பான சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இந்த நிலையில், ஜிரிபம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறித்து சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை தாக்கியுள்ளனர். இதில், பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கி சூடு செய்தனர். இந்தச் சம்பவத்தில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 11 பேரும் குக்கி சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu