பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றம்

November 23, 2023

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பீஹார் மாநிலத்தில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அங்கு வசித்து வரும் ஏழைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. எனவே அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் உள்ளன. அவர்களின் மேம்பாட்டிற்காக ரூபாய் […]

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.பீஹார் மாநிலத்தில் சமீபத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலம் அங்கு வசித்து வரும் ஏழைகள் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. எனவே அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி மக்களை மேம்படுத்த வேண்டும் என மத்திய அரசை பீகார் அரசு வலியுறுத்தி வந்தது. இந்நிலையில் நேற்று பீகார் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பீஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப்படி 94 லட்சம் ஏழை குடும்பங்கள் உள்ளன. அவர்களின் மேம்பாட்டிற்காக ரூபாய் 2.50 லட்சம் கோடி அளவிலான திட்டங்கள் தேவைப்படுகின்றன. இது மிகப்பெரிய நிதி என்றாலும் மத்திய அரசு உதவியின் மூலம் இந்த பணிகளை செய்து முடிக்கலாம் என பீகார் முதன் மந்திரி நிதிஷ்குமார் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu