தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ வேலுவிற்க்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் தொடர்ந்து வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்ள வீடு கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்றது. இதில் இதுவரை நடைபெற்ற சோதனையில் கிடைத்த ஆவணங்கள் எதும் வெளியிடாமல் இருந்த நிலையில் தற்போது கணக்கில் வராத 18 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோல அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 250 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.