ஓட்டுநர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை வெற்றி

ஓட்டுனர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த சோதனை தானியங்கி கனரக வாகனங்கள் துறையில் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த அரோரா இன்னோவேஷன் என்ற நிறுவனம், கனரக வாகனங்களை ஓட்டுநர் இல்லாமல் இயக்கும் சோதனை முயற்சியை செய்தது. இந்த சோதனையின் போது, கிட்டத்தட்ட 80000 பவுண்டு எடை கொண்ட வாகனம், 65 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. கேமரா, சென்சார், ரேடார் போன்ற […]

ஓட்டுனர் இல்லாமல் கனரக வாகனங்களை இயக்கும் சோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட இந்த சோதனை தானியங்கி கனரக வாகனங்கள் துறையில் முக்கிய மைல் கல்லாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பகுதியைச் சேர்ந்த அரோரா இன்னோவேஷன் என்ற நிறுவனம், கனரக வாகனங்களை ஓட்டுநர் இல்லாமல் இயக்கும் சோதனை முயற்சியை செய்தது. இந்த சோதனையின் போது, கிட்டத்தட்ட 80000 பவுண்டு எடை கொண்ட வாகனம், 65 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது. கேமரா, சென்சார், ரேடார் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, 25 லேசர் கட்டளை செய்திகள் மூலம் சோதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மூன்று வழி சாலைகளில் பயணிக்கும் படி இந்த சோதனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கனரக வாகனத்திற்கு 400 மீட்டர் முன்பாக தடுப்புகளோ வாகனங்களோ இருந்தால், தானாக மாற்றுப் பாதையை தேர்வு செய்யும் திறன் சோதிக்கப்பட்டது. இந்த சோதனை முழுமையான வெற்றி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த முறையை பின்பற்றுவதற்கான வாக்கெடுப்பில் 44% பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu