ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து ஸ்பெயினை நோக்கி சென்ற 3 அகதிகள் படகுகள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. படகுகளில் கிட்டத்தட்ட 300 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, படகில் இருந்தவர்களின் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி, முதல் அகதிகள் படகு 100 பேருடன் கிளம்பியுள்ளது. அதைத் தொடர்ந்து, 4 நாட்கள் கழித்து 200 அகதிகளுடன் 2 படகுகள் புறப்பட்டுள்ளன. ஆனால், அட்லாண்டிக் வழித்தடத்தில் படகுகள் கிளம்பிய உடனேயே, அவற்றுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. படகுகள் கிளம்பி நெடுநாட்கள் ஆகியும் தொடர்பு கிடைக்கப் பெறாததால், கலக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், 2023 ஆம் ஆண்டில் இதுவரை 800 அகதிகள் கடலில் மூழ்கி உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. இந்நிலையில், படகுகளை தேடுவதற்கு கூடுதல் விமானங்கள் தேவை என கூறப்படுகிறது.