தொடர்ந்து 3 அமர்வுகளாக, இந்திய பங்குச் சந்தையில் கடும் சரிவு பதிவாகி வருகிறது. இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 570.6 புள்ளிகளை இழந்து, 66230.24 ஆக உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண், 159.06 புள்ளிகளை இழந்து 19742.35 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, டாக்டர் ரெட்டீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றிருந்தன. ஆனால், மஹிந்திரா, ஐசிஐசிஐ வங்கி, சிப்லா, எஸ் பி ஐ, டாடா ஸ்டீல், பவர் கிரிட், கோல் இந்தியா, ஐடிசி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி போன்ற பல நிறுவனங்கள் சரிவை பதிவு செய்துள்ளன.