ஐடி பங்குகள் கடும் சரிவு - சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி

December 10, 2022

கடந்த வாரம், ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தை, இந்த வாரம் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், நேற்றைய வர்த்தக நாளில், 0.62% குறைந்து, 62181.67 ஆக இருந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 0.61% குறைந்து, 18496.60 ஆக இருந்தது. குறிப்பாக, ஐடி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. ஹெச் சி எல் நிறுவனம் 6.72% சரிவை பதிவு செய்தது. மேலும், டெக் […]

கடந்த வாரம், ஏற்றத்தில் இருந்த பங்குச் சந்தை, இந்த வாரம் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், நேற்றைய வர்த்தக நாளில், 0.62% குறைந்து, 62181.67 ஆக இருந்தது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 0.61% குறைந்து, 18496.60 ஆக இருந்தது.

குறிப்பாக, ஐடி பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. ஹெச் சி எல் நிறுவனம் 6.72% சரிவை பதிவு செய்தது. மேலும், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, டிசிஎஸ் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்களும் இழப்பை சந்தித்தன. ஐடி நிறுவனங்களின் சரிவால், அதில் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் போன்றவையும் பெரும் இழப்பை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், நெஸ்ட்லே, டைட்டன், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டீஸ், இண்டஸ் இண்ட் வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் கண்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu