சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் எதிர்மறையாக இருந்து வருகின்றன.
இந்த வாரம் முழுவதும் பங்குச் சந்தையில் கரடியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. வாரத்தின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை, மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 981 புள்ளிகள் சரிந்தது. மேலும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 321 புள்ளிகள் சரிந்தது.
சந்தை புள்ளி விவரத் தகவல்கள் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் 928.63 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளது தெரியவந்துள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், சென்செக்ஸ் 60,000 புள்ளிகளை விட கீழே சரிந்து, 59845.21 புள்ளிகளில் நிறைவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், டைட்டன் தவிர 29 பங்குகளின் மதிப்புகளும் குறைந்தன. நிஃப்டி குறியீட்டு எண் 17806.80 ஆக நிலை கொண்டது.
வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு 8.43 லட்சம் கோடி குறைந்து, 272.13 லட்சம் கோடியாக பதிவானது. மேலும், கடந்த மூன்று வர்த்தக நாட்களில், சந்தை மதிப்பிழப்பு 15.27 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.