ஜனவரி 25ஆம் தேதி, இந்திய பங்குச் சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது. அன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 774.69 புள்ளிகள் சரிந்து 60205.06 ஆக நிலை கொண்டது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 226.35 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 17891.95 ஆக பதிவானது.
ஜனவரி 25 அன்று, பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் தொடங்கி வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்துள்ளது. நிதி மற்றும் வங்கி பங்குகளின் வீழ்ச்சி இந்திய பங்குச் சந்தையின் முதலீட்டாளர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், ஐடிசி மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை பதிவு செய்துள்ளன. அதே வேளையில், ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம், விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, நெஸ்லே, ஹெச்டிஎஃப்சி நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை பதிவு செய்திருந்தன.