வரலாற்றில் முதல் முறையாக 70000 புள்ளிகளைத் தொட்ட சென்செக்ஸ்

December 11, 2023

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக, 70000 புள்ளிகளை சென்செக்ஸ் இன்று தொட்டுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 21,000 புள்ளிகளை கடந்தது. இன்றைய வர்த்தக நேரத்தின் இடையில் இந்த இலக்கு எட்டப்பட்டது. ஆனால், இன்றைய வர்த்தக நாளின் முடிவில், சென்செக்ஸ் 69928.53 ஆகவும், நிஃப்டி 20997.1 ஆகவும் நிறைவு பெற்றுள்ளன. இன்றைய வர்த்தகத்தில் யூபிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, பஜாஜ் […]

இந்திய பங்குச் சந்தை வரலாற்றில் முதல் முறையாக, 70000 புள்ளிகளை சென்செக்ஸ் இன்று தொட்டுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 21,000 புள்ளிகளை கடந்தது. இன்றைய வர்த்தக நேரத்தின் இடையில் இந்த இலக்கு எட்டப்பட்டது. ஆனால், இன்றைய வர்த்தக நாளின் முடிவில், சென்செக்ஸ் 69928.53 ஆகவும், நிஃப்டி 20997.1 ஆகவும் நிறைவு பெற்றுள்ளன.

இன்றைய வர்த்தகத்தில் யூபிஎல், அல்ட்ராடெக் சிமெண்ட், அதானி எண்டர்பிரைசஸ், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, பஜாஜ் ஆட்டோ, நெஸ்லே இந்தியா, பவர் கிரிட், ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, கோல் இந்தியா ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், டாக்டர் ரெட்டிஸ், சிப்லா, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, பி பி சி எல், மஹிந்திரா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், மாருதி சுசுகி ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu