வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை - சென்செக்ஸ் 320 புள்ளிகள் உயர்வு

September 15, 2023

இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய நாளின் தொடக்கம் முதலே ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை, இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து 11 நாட்களாக பங்குச்சந்தை உயர்வது, கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 319.63 புள்ளிகள் உயர்ந்து 67838.63 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 89.25 புள்ளிகள் […]

இந்திய பங்குச் சந்தையில் இன்று வரலாற்று உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய நாளின் தொடக்கம் முதலே ஏற்றம் பெற்ற பங்குச்சந்தை, இறுதியில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. தொடர்ந்து 11 நாட்களாக பங்குச்சந்தை உயர்வது, கடந்த 16 ஆண்டுகளில் இதுவே முதல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 319.63 புள்ளிகள் உயர்ந்து 67838.63 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 89.25 புள்ளிகள் உயர்ந்து 20192.35 புள்ளிகளாக உள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், மஹிந்திரா, ஹீரோ மோட்டோகார்ப், கிராசிம், நெஸ்லே, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி, டாக்டர் ரெட்டீஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட அனேக நிறுவனங்கள் ஏற்றம் பெற்றன. அதே வேளையில், பவர் கிரிட், ஓஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், பிபிசிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பிரிட்டானியா, டாடா கன்ஸ்யூமர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சரிவை சந்தித்தன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu