இன்றைய வர்த்தக நாளில், இந்தியா, ஜப்பான் பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனும், ஷாங்காய், ஹாங்காங் பங்குச் சந்தைகள் இறக்கத்துடனும் பதிவாகியுள்ளன. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண், தனது வரலாற்று உச்சத்தை பதிவு செய்தது. இன்று காலை சென்செக்ஸ் புள்ளிகள் 63588.31 ஆக உயர்ந்திருந்தது. ஏழு மாதங்களுக்குப் பிறகு, இத்தகைய உயர்வை சென்செக்ஸ் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இன்றைய வர்த்தக நேர முடிவில், 63523.15 ஆக சென்செக்ஸ் புள்ளிகள் நிலை பெற்றது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 13856.85 புள்ளிகள் ஆக நிலை பெற்றுள்ளது. இது முந்தைய வர்த்தக நாளை விட 40.15 புள்ளிகள் கூடுதலாகும்.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, பவர் கிரிட், எச்டிஎப்சி, ஓஎன்ஜிசி, அதானி போர்ட்ஸ், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஹிந்தால்கோ, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை இறக்கத்தை சந்தித்துள்ளன.