பங்குச் சந்தையில் சரிவு - சென்செக்ஸ் 215 புள்ளிகள் வீழ்ச்சி

June 19, 2023

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை இன்று சரிவடைந்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 216.28 புள்ளிகள் குறைந்து 63168.3 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 70.55 புள்ளிகள் குறைந்து 18755.45 ஆக உள்ளது. இன்றைய […]

இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வார இறுதியில் உச்சத்தை தொட்ட இந்திய பங்குச்சந்தை இன்று சரிவடைந்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 216.28 புள்ளிகள் குறைந்து 63168.3 புள்ளிகள் ஆக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 70.55 புள்ளிகள் குறைந்து 18755.45 ஆக உள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கி மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளது. அடுத்ததாக, ஆக்சிஸ் வங்கி, என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ சி ஐ சி ஐ வங்கி, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், ஹெச் சி எல் டெக், இன்டஸ் இன்ட் வங்கி, நெஸ்லே ஆகிய நிறுவனங்களும் சரிவடைந்துள்ளன. அதே வேளையில், பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டைட்டன், இன்ஃபோசிஸ், ஹெச் டி எப் சி வங்கி, ஐடிசி ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu