இந்திய பங்குச் சந்தையில் நேற்று ஏற்றம் பதிவான நிலையில், இன்று மீண்டும் சரிவு நிலை காணப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் 630 புள்ளிகள் வரை சென்செக்ஸ் இழந்தது. இறுதியில், 359.64 புள்ளிகளை இழந்து, 70700.67 புள்ளிகளில் நிலைபெற்று உள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 101.36 புள்ளிகள் இழந்து, 21352.6 புள்ளிகளாக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அதானி போர்ட்ஸ், என்டிபிசி, கோல் இந்தியா, இண்டஸ் இண்ட் வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், பஜாஜ் பின்சர்வ் ஆகியவை ஏற்றம் அடைந்துள்ளன. ஆனால், டெத் மஹிந்திரா, சிப்லா, ஏர்டெல், எல் டி ஐ மைண்ட் ட்ரீ, எஸ்பிஐ லைஃப், டாடா கன்சியூமர், டேவிஸ் லேப்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, பவர் கிரிட், இன்ஃபோசிஸ் ஆகியவை சரிவை சந்தித்துள்ளன.