நேற்றைய சரிவிலிருந்து மீண்ட இந்திய பங்குச் சந்தை, இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 391.26 புள்ளிகள் உயர்ந்து 80351.64 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 112.66 புள்ளிகள் உயர்ந்து 24433.2 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், அதானி பவர், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், மாருதி சுசுகி, வோடபோன், எஸ் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், நேற்று ஏற்றம் பெற்ற ரயில்வே துறை பங்குகளான ரயில் விகாஸ் நிகாம், இர்கான் இன்டர்நேஷனல், ரயில் டெல் கார்ப், இந்தியன் ரயில்வே பைனான்ஸ் போன்றவை வீழ்ச்சி அடைந்துள்ளன. இவை தவிர, ரேமண்ட், டிசிஎஸ், இன்போசிஸ், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களும் சரிவடைந்துள்ளன.