விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கிய பங்குச் சந்தை இறக்கத்துடன் இருந்தது. ஆனால், இன்றைய வர்த்தக நேர இறுதியில், சற்று மீண்டெழுந்து, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 137.5 புள்ளிகள் சரிவடைந்து, 65539.42 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 30.45 புள்ளிகள் சரிந்து, 19465 ஆக உள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, அல்ட்ராடெக் சிமெண்ட், அப்பல்லோ ஹாஸ்பிடல், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, இன்ஃபோசிஸ் ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், எச்டிஎப்சி வங்கி, அதானி எண்டர்பிரைசஸ், ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஹிந்தால்கோ ஆகிய நிறுவனங்கள் இறக்கமடைந்துள்ளன. மேலும், இண்டிகோ நிறுவனத்தின் பங்குகளை கங்குவால் குடும்பம் விற்ற செய்தி வெளியான பிறகு, நிறுவனத்தின் பங்குகள் 4% சரிவடைந்து வர்த்தகமாகி வருகின்றன.