ஏற்ற இறக்கப் பாதையில் பயணித்து வரும் இந்திய பங்குச் சந்தை, இன்றைய வர்த்தக நேர முடிவில் சிறிய அளவிலான ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 73961.31 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 22530.7 புள்ளிகளிலும் நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஸ்ரீராம் பைனான்ஸ், கோல் இந்தியா, டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், பவர் கிரிட், ஐடிசி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. டேவிஸ் லேப்ஸ், நெஸ்லே, டிசிஎஸ், மாருதி சுசுகி, எல் டி ஐ மைண்ட்ரீ, இன்ஃபோசிஸ், டாக்டர் ரெட்டிஸ், என் டி பி சி, ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன.