கடந்த 3 நாட்களாக, இந்திய பங்குச் சந்தை தொடர் சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 297.94 புள்ளிகள் உயர்ந்து 61729.68 ஆக நிலை கொண்டுள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 73.45 புள்ளிகள் உயர்ந்து, 18203.40 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை, வோடபோன் ஐடியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஜொமாட்டோ ஆகியவை உயர்வை சந்தித்துள்ளன. அதே வேளையில், எஸ் வங்கி, டாடா ஸ்டீல் ஆகியவை இழப்பை சந்தித்துள்ளன.