ஏற்றத்தில் பங்குச் சந்தை - சென்செக்ஸ் 1100 புள்ளிகள் உயர்வு

November 11, 2022

இன்றைய வர்த்தக நாளில் பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. அமெரிக்க பணவீக்கம் குறித்த தகவல்களை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிட்டது. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் அனைத்து துறை பங்குகளும் இன்று ஏற்றத்தை சந்தித்தன. இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1100 புள்ளிகள் வரை உயர்ந்தது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 52 வார உயர்வை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின் போது, […]

இன்றைய வர்த்தக நாளில் பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. அமெரிக்க பணவீக்கம் குறித்த தகவல்களை அமெரிக்க பெடரல் ரிசர்வ் வெளியிட்டது. அதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தையில் அனைத்து துறை பங்குகளும் இன்று ஏற்றத்தை சந்தித்தன.

இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 1100 புள்ளிகள் வரை உயர்ந்தது. மேலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 52 வார உயர்வை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நேரத்தின் போது, சென்செக்ஸ் 1.62% உயர்ந்து, 61598 ஆக இருந்தது. நிஃப்டி 1.52% உயர்ந்து, 18302 ஆக இருந்தது. விப்ரோ, டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், எச் சி எல், இன்டஸ் இன்ட் வங்கி, டாடா ஸ்டீல், டிசிஎஸ், பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2 - 3.5% உயர்வைச் சந்தித்தன. இவை தவிர, பிற நிறுவனங்களும் இன்று ஏற்றத்திலேயே இருந்தன. நைக்கா நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதமும், ஜோமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதமும் உயர்ந்து வர்த்தகமாயின.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu