கடந்த வாரம் ஏற்றம் பெற்ற இந்திய பங்குச் சந்தை, நேற்று சரிவை சந்தித்தது. இன்றைய தினம் சரிவிலிருந்து மீண்டு ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளது. இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 122.1 புள்ளிகள் உயர்ந்து, 71437.19 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 34.45 புள்ளிகள் உயர்ந்து, 21453.1 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, கோல் இந்தியா, நெஸ்லே, என்டிபிசி, டாடா கன்ஸ்யூமர், சிப்லா, ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஓஎன்ஜிசி, பவர் கிரிட் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால், அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், விப்ரோ, அதானி எண்டர்பிரைசஸ், ஈச்சர் மோட்டார்ஸ், யூ பி எல், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, டிசிஎஸ் போன்றவை சரிந்துள்ளன.