கடந்த வாரத்தில் தொடர் சரிவை சந்தித்த பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
உலக அளவில் நிலவி வரும் பங்குச்சந்தை நிலவரம் காரணமாக இந்த ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய வர்த்தக நாளில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 989 புள்ளிகள் வரை உயர்ந்தது. இறுதியாக 847 புள்ளிகள் உயர்ந்து, 60747 ஆக நிலை கொண்டது. மஹிந்திரா, ஹச்சிஎல், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் வங்கி, ஏர்டெல், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ், விப்ரோ, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி, எச்யூஎல் நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்தை சந்தித்தன.
அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 242 புள்ளிகள் உயர்ந்து, 18101 ஆக நிலை கொண்டது. எஸ்பிஐ லைஃப் 3% வளர்ச்சியை பதிவு செய்தது. டைட்டன், பஜாஜ் பின்செர்வ், மாருதி, பஜாஜ் ஆட்டோ, ஹெச்டிஎஃப்சி லைஃப் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகள் சரிவை சந்தித்தன.