4 நாள் ஏற்றத்திற்கு முடிவு - சென்செக்ஸ் 223 புள்ளிகள் சரிவு

June 9, 2023

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றமடைந்த இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து 4 நாட்களாக ஏற்றத்தை பதிவு செய்து வந்தது. ஆனால், இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 223.01 புள்ளிகள் சரிந்து, 62625.63 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 71.15 புள்ளிகள் சரிந்து 18563.4 புள்ளிகளாக உள்ளது. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, இண்டஸ் […]

இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஏற்றமடைந்த இந்திய பங்குச் சந்தை, தொடர்ந்து 4 நாட்களாக ஏற்றத்தை பதிவு செய்து வந்தது. ஆனால், இந்த வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று, பங்குச் சந்தை இறக்கத்துடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 223.01 புள்ளிகள் சரிந்து, 62625.63 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 71.15 புள்ளிகள் சரிந்து 18563.4 புள்ளிகளாக உள்ளது.

தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, இண்டஸ் இண்ட் வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பவர் கிரிட், அதானி எண்டர்பிரைசஸ், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி ஆகிய நிறுவனங்கள் ஏற்றமடைந்துள்ளன. அதே வேளையில், ஹீரோ மோட்டோகார்ப், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ் பி ஐ, ஹெச்டிஎஃப்சி லைஃப், ஈச்சர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu