இன்றைய வர்த்தக நாளில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் முதல் முறையாக 80000 புள்ளிகளை தாண்டியது. எனினும், வர்த்தக நேர முடிவில் 79986.8 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில், இது 0.68% உயர்வாகும். மேலும், பங்குச் சந்தை வரலாற்றில் புதிய உச்சம் ஆகும். அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் முந்தைய நாளை விட 162.66 புள்ளிகள் உயர்ந்து 24286.5 புள்ளிகளில் உச்சம் தொட்டு நிறைவடைந்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, டாடா ஸ்டீல், ஐடிசி, இன்ஃபோசிஸ், அதானி பவர், கேஸ்ட்ரோல், கொச்சின் ஷிப் யார்ட், மஜகான் டாக்ஷிப், வோடபோன், எஸ் வங்கி, ஐ டி எஃப் சி ஃபர்ஸ்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, மும்பை மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவை ஏற்றமடைந்துள்ளன. அதே சமயத்தில், ஜேகே பேப்பர், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன.