பங்குச் சந்தையில் தொடர் சரிவு - சென்செக்ஸ் 360 புள்ளிகள் வீழ்ச்சி

March 20, 2023

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து கரடியின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்திலேயே சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, கிட்டத்தட்ட 800 புள்ளிகள் வரை வீழ்ச்சியை கண்டது. இறுதியாக, இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 360.95 புள்ளிகள் சரிந்து, 57628.95 புள்ளிகளில் நிலை கொண்டது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 111.65 புள்ளிகள் குறைந்து 16988.4 புள்ளிகளாக இருந்தது. கிரெடிட் […]

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து கரடியின் ஆதிக்கத்தில் இருந்து வருகிறது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கத்திலேயே சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை, கிட்டத்தட்ட 800 புள்ளிகள் வரை வீழ்ச்சியை கண்டது. இறுதியாக, இன்றைய வர்த்தக நாளின் இறுதியில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 360.95 புள்ளிகள் சரிந்து, 57628.95 புள்ளிகளில் நிலை கொண்டது. அதே வேளையில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 111.65 புள்ளிகள் குறைந்து 16988.4 புள்ளிகளாக இருந்தது.

கிரெடிட் சூயிஸ் வங்கியை யுஎஸ்பி ஆல் கையகப்படுத்த உள்ள செய்தி இன்று வெளியானது. இது, வங்கித் துறையில் ஏற்பட்ட சரிவை ஈடு செய்யும் என்று கருதப்பட்டது. ஆனாலும், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மேலும், கடந்த மார்ச் 9ம் தேதி முதல் தற்போது வரை, கிட்டத்தட்ட 2700 புள்ளிகளை சென்செக்ஸ் இழந்துள்ளது. இதற்கு, உலகளாவிய முறையில் ஏற்பட்டுள்ள வங்கித் துறையின் சரிவே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

முந்த்ரா திட்டத்தை கைவிடுவதாக அதானி குழுமம் அறிவித்ததை அடுத்து, பங்குச்சந்தையில் 10ல் 9 அதானி நிறுவனங்கள் சரிவடைந்துள்ளன. தனிப்பட்ட பங்குகளை பொறுத்தவரை, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி நிறுவனங்கள் லாபத்தையும், பஜாஜ் பின்சர்வ், டாடா ஸ்டீல் நிறுவனங்கள் இழப்பையும் பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu