செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிப்பு

October 20, 2023

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9 முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் மனு கேட்டும் அவை நிராகரிக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கபட்டு வருகிறது. மருத்துவ காரணங்களை காரணம் காட்டியும், சாட்சியங்களை அளிக்கும் வாய்ப்பு இருப்பதாலும் இவரது மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9 முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்றத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் மனு கேட்டும் அவை நிராகரிக்கப்பட்டு நீதிமன்ற காவல் நீட்டிக்கபட்டு வருகிறது. மருத்துவ காரணங்களை காரணம் காட்டியும், சாட்சியங்களை அளிக்கும் வாய்ப்பு இருப்பதாலும் இவரது மனு தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது இவரது நீதிமன்ற காவல் நவம்பர் 6ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இத்துடன் இவரது நீதிமன்ற காவல் 9 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu