முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் செந்தில் பாலாஜி தரப்பில் இருந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வழக்கபட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கி உள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக 8 மாதங்களாக நீடித்த நிலையில் அமைச்சர் பதவி ராஜினாமா செய்வதாக புழல் சிறையில் இருந்து கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்த கடிதம் நேற்று முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக் கொண்டுள்ளார்.