செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை நாளை மறுநாள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் தனக்கு ஜாமீன் வழங்க கோரியும், அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது கோடை விடுமுறைக்கு பின் இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்காக பட்டியலிடப்பட்டது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்