செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

April 30, 2024

சட்ட விரோத பணப்பரி மாற்ற தடை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில் மனு மீதான வழக்கினை நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு […]

சட்ட விரோத பணப்பரி மாற்ற தடை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் தொடர்ந்து மறுக்கப்பட்டு வரும் நிலையில் மனு மீதான வழக்கினை நீதிமன்றம் மூன்று மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதற்கு எதிராகவும் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையில் பதில் அளிக்க அமலாக்க துறைக்கு ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. இதனை அடுத்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ய்ந்த வழக்கில் கால அவகாசம் தேவைப்படுவதாக வழக்கின் மீதான விசாரணையை மே ஆறாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu