செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை சென்னை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கையும் அமலாக்க துறையினர் தாக்கல் செய்துள்ளனர். இதற்கு இடையே அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் விசாரணை கடந்த 14 ஆம் தேதி நடைபெற்றது. அதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மறுக்கப்பட்டிருப்பதாக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இதில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க இயலாது என்று நீதிபதி ஜெயச்சந்திரன் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.