சுற்றுலா பயணிகளுக்காக தனி செயலி - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

February 2, 2023

நேற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், 'சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனி செயலி அறிமுகம் செய்யப்படும்' என்ற அறிவிப்பு வெளியானது. புதிதாக அறிமுகம் செய்யப்படும் செயலியில் சுற்றுலா தளங்கள் குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா தளத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், வழிகாட்டி, அருகில் உள்ள உணவகங்கள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் […]

நேற்று, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், 'சுற்றுலா பயணிகள் வசதிக்காக தனி செயலி அறிமுகம் செய்யப்படும்' என்ற அறிவிப்பு வெளியானது.

புதிதாக அறிமுகம் செய்யப்படும் செயலியில் சுற்றுலா தளங்கள் குறித்த அனைத்து விவரங்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சுற்றுலா தளத்துக்கு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள், வழிகாட்டி, அருகில் உள்ள உணவகங்கள், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கருத்துக்கள் அடிப்படையில் 50 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு செயலி செயல்படுத்தப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தவிர, சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்காக சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவை: துடிப்பான கிராமங்கள் திட்டத்தின் கீழ் எல்லையோர கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். கைவினைப் பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் மாநில தலைநகரங்களில் 'யூனிட்டி மால்' எனப்படும் ஒருங்கிணைந்த சந்தை நிறுவப்படும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu