ஈரோடு அரசு மருத்துவமனைகளில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வார்டு

ஈரோட்டில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் அதிகமான வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உட்பட்ட எட்டு மருத்துவமனைகளில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. […]

ஈரோட்டில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 8 அரசு மருத்துவமனைகளில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து ஈரோடு மாவட்டத்தில் அதிகமான வெப்பம் வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 27 நாட்கள் ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவாகி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உட்பட்ட எட்டு மருத்துவமனைகளில் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. இதில் வெப்ப அலேர்ஜியால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு முதலுதவி அளிக்க செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வெப்ப தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதற்காக அனைத்து மருத்துவமனைகளிலும் உப்பு சர்க்கரை கரைசல் வழங்கப்படுகின்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu