செர்பியா சட்டசபையை கலைத்தார் அதிபர் அலெக்ஸாண்டர் ஓவிக்

November 3, 2023

செர்பியா நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் ஓவிக், அந்நாட்டு நாடாளுமன்றத்தை நேற்று கலைத்துள்ளார். அத்துடன், விரைவாக தேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளார். செர்பியா நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு அரசியல் சார்ந்த அவசர சூழல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் அழுத்தச் சிக்கல் ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக, அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17ஆம் தேதி, அந்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் போதே சட்டசபை தேர்தலை நடத்தவும் அலெக்சாண்டர் ஓவிக் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில […]

செர்பியா நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் ஓவிக், அந்நாட்டு நாடாளுமன்றத்தை நேற்று கலைத்துள்ளார். அத்துடன், விரைவாக தேர்தல் நடத்த வலியுறுத்தியுள்ளார்.
செர்பியா நாட்டில் நிலவி வரும் உள்நாட்டு அரசியல் சார்ந்த அவசர சூழல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் அளித்து வரும் அழுத்தச் சிக்கல் ஆகியவற்றை எதிர்கொள்ளும் விதமாக, அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 17ஆம் தேதி, அந்நாட்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதன் போதே சட்டசபை தேர்தலை நடத்தவும் அலெக்சாண்டர் ஓவிக் வலியுறுத்தியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக, செர்பியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு முயற்சி செய்து வருகிறது. அவ்வாறு இணையும் பட்சத்தில், வர்த்தகம் மற்றும் ரஷ்யா உடனான உறவு ஆகியவற்றில் ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். எனவே, அங்கு தொடர்ந்து குழப்பச் சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu