செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
செர்பியா நாட்டின் நோவிசாட் ரெயில் நிலையத்தில் 2023 நவம்பர் 1-ந்தேதி மேல் கூரை சரிந்து 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சீரமைப்பு பணிகளில் ஊழல் நடந்தது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. முன்னாள் மந்திரி உட்பட பல அரசு அதிகாரிகள் மீது வழக்குகள் பதியப்பட்டன. செர்பியா பிரதமர் மிலோஸ் வுசெவிக்கு எதிராக பொதுமக்கள் நீண்ட காலம் போராடி, சர்வாதிகார நிலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மிலோஸ் வுசெவிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். புதிய அரசாங்கம் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் 30 நாட்களில் நடைபெற உள்ளது.