உலக அளவில் பிரபல செயற்கைக்கோள் இணைப்பு சேவை நிறுவனம் இன்டல்சாட் ஆகும். இந்த நிறுவனத்தை 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகைக்கு எஸ் இ எஸ் என்ற நிறுவனம் கையகப்படுத்துகிறது. இந்த நிறுவனமும் ஜியோ சாட்டிலைட் துறையில் முன்னணியில் உள்ளது. எனவே, எதிர்காலத்தில் குறைந்த தூரத்தில் நிறுவப்படும் வணிக செயற்கைக்கோள் சந்தையில் போட்டி நிலவரம் அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, எஸ் இ எஸ் நிறுவனம் இன்டல்சாட் நிறுவனத்தை வாங்குவது பற்றிய அறிவிப்பு வெளியானது. வரும் 2025 ஆம் ஆண்டின் இறுதிவரையில், மொத்த பண பரிமாற்றம் நிகழும் என சொல்லப்பட்டுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து கூட்டாக அமையும் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் லக்சம்பர்க் நகரில் அமையும். ஆனால், இன்டெல்சாட் நிறுவனத்தின் வாஷிங்டன் டிசி தலைமையகத்தில் முக்கிய அலுவல் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.