ஆஸ்திரேலியா - சிட்னியில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

May 25, 2023

ஆஸ்திரேலியாவின் மத்திய சிட்னி நகரில் அமைந்துள்ள 7 மாடி கட்டிடத்தில், இன்று பயங்கர தீ விபத்து நேர்ந்துள்ளது. கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து, புகை விண்ணை மட்டும் வகையில் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவத் தொடங்கியதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க போராடி […]

ஆஸ்திரேலியாவின் மத்திய சிட்னி நகரில் அமைந்துள்ள 7 மாடி கட்டிடத்தில், இன்று பயங்கர தீ விபத்து நேர்ந்துள்ளது. கட்டிடத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து, புகை விண்ணை மட்டும் வகையில் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவத் தொடங்கியதால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்தனர். தற்போது, நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மேலும், கட்டிடத்தில் இருந்த தீ, மளமளவென அருகில் இருக்கும் கட்டிடங்களுக்கும் பரவத் தொடங்கியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், கட்டிடத்தின் மேல் தளம் முழுவதுமாக சேதம் அடைந்து, அதன் சுவர் சரிந்து விழுந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. தீ தொடர்ந்து எரிந்து வருவதால், பொது மக்களுக்கு இந்தப் பகுதிக்குள் வர அனுமதி வழங்கப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu