ஃப்ளோரிடாவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து விபத்து - பலர் உயிரிழப்பு

February 2, 2024

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்ததில் குடியிருப்பு பகுதியில் இருந்த மூன்று வீடுகள் தீக்கிரையாகியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. வியாழக்கிழமை இரவு, பீச் கிராப்ட் போனான்சா வி 35 என்ற சிறிய ரக விமானம், அவசர தரையிறக்கம் கோரி கிளியர் வாட்டர் விமான நிலையத்தை தொடர்பு […]

அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் முழுமையாக தீப்பிடித்து எரிந்ததில் குடியிருப்பு பகுதியில் இருந்த மூன்று வீடுகள் தீக்கிரையாகியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விபத்து காரணமாக பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை.

வியாழக்கிழமை இரவு, பீச் கிராப்ட் போனான்சா வி 35 என்ற சிறிய ரக விமானம், அவசர தரையிறக்கம் கோரி கிளியர் வாட்டர் விமான நிலையத்தை தொடர்பு கொண்டது. உடனடியாக ரேடார் இணைப்பு துண்டிக்கப்பாகி, விமானம் கிளியர் வாட்டர் பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் விழுந்து தீப்பிடித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக, அமெரிக்க மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu