அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளில் மோசமான வானிலை மற்றும் புயல் காரணமாக 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் வடகிழக்கு பகுதிகளான நியூயார்க், நியூ ஜெர்சி, பென்சில்வேனியா, மேரிலாண்ட் ஆகிய மாகாணங்கள் கடுமையான புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டன. இதனால் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டு பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளது.
நியூயார்க்,நியூ ஜெர்சி ஆகிய நகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையங்களின் கண்காணிப்பு நிர்வாகம், இந்த புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக சுமார் 1,500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.