மழைக்காலத்தில் பெய்ய வேண்டிய மழை சில மணி நேரத்தில் கொட்டியதால், டெக்சாஸ் மாநிலத்தில் கடும் வெள்ளப் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
மத்திய கெர் கவுண்டியில் ஏற்பட்ட கனமழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர் ஊர்களுக்குள் புகுந்து வீடுகள், வாகனங்களை அடித்து சென்றது. பல வீடுகள் முழுமையாக மூழ்க, பலர் மேல்மாடியில் தஞ்சம் அடைய நேர்ந்தது. தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது, இதில் 28 குழந்தைகளும் உள்ளனர். மேலும் 41 பேர் காணாமல் போயுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கை அனர்த்தம், அமெரிக்காவின் சமீபத்திய பெரும் வெள்ள அனுபவங்களில் ஒன்றாகும்.














