உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய 14 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளன.
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய 14 முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளன. உணவக தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதும், உணவுப்பொருட்கள் சுத்தமாக பாதுகாக்கப்படுவதும் கட்டாயம். மேலும், மீண்டும் பயன்படுத்திய எண்ணெய் விற்பனைக்கு அனுமதிக்கப்படாது; நாளிதழ், நெகிழி போன்ற பொருட்களில் உணவுப் பொருள் பாக்கெட் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. உணவகங்களில் பரிமாறப்படும் உணவுகள் லேபிள் விவரங்களுடன் இருக்க வேண்டும். இந்த நெறிமுறைகள் மீறப்படுமானால், கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.