அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் போன்ற இடங்களில் மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசுவதால் சாலை, ரெயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பனிப்புயல் காரணமாக, மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேரிலெண்ட் மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. […]

அமெரிக்காவின் பல மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது.

மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா, இலினோயிஸ் போன்ற இடங்களில் மணிக்கு 72 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசுவதால் சாலை, ரெயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பனிப்புயல் காரணமாக, மிசோரி, இண்டியானா, வெர்ஜினியா, கெண்டகி, மேற்கு வெர்ஜினியா ஆகிய மாகாணங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேரிலெண்ட் மாகாணத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் 1,400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, பல விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டன. பனிப்புயல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu